Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காப்பீட்டு துறை சீர்திருத்த அமலாக்கம்: IRDAI தலைவர் கருத்து

காப்பீட்டு துறை சீர்திருத்த அமலாக்கம்: IRDAI தலைவர் கருத்து
பகிரவும் WhatsApp Facebook

காப்பீட்டுத் துறை சீர்திருத்தங்கள் துறை சார்ந்த அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்துக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) தலைவர் அஜய் சேத் தெரிவித்துள்ளார்.

மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் பிஎஃப்எஸ்ஐ இன்சைட்ஸ்' வருடாந்திர உச்சி மாநாடு அக்டோபர் 26 முதல் இன்று வரை நடைபெறுகிறது. இதில் நேற்று ஐஆர்டிஏஐ தலைவர் அஜய் சேத் கலந்து கொண்டார். 

அப்போது விழா மேடையில் அவர் பேசியதாவது: 

விநியோகச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாத அறிக்கை வெளியானதிலிருந்து துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். துறை சார்ந்த அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்துக்கு பிறகே சீர்த்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.

புதிய பாலிசிகளை விற்பனை செய்வதற்கு ஆரம்பத்தில் அதிக உழைப்பு தேவைப்படுவதால் தொடக்கக்கட்ட கமிஷனை அதிகமாகவும், புதுப்பித்தலின் போது குறைவாகவும் நிர்ணயிக்க விவாத அறிக்கையில் பரிந்துரைத்துள்ளோம். இந்தியாவில் பாலிசியை வேறு நிறுவனத்திற்கு மாற்றிய ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களில் 60 சதவீதம் பேர் வெறும் 3 முன்னணி நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அங்கு சென்றுள்ளனர்; அதே சமயம், அந்த 3 நிறுவனங்களில் இருந்தும் 20 சதவீத வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் இந்த முடிவுக்குச் சேவையின் தரத்தைவிட முகவர்களுக்குக் கிடைக்கும் கமிஷனே முக்கியக் காரணமாக உள்ளது. வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் மருத்துவக் காப்பீட்டு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணவும், மருத்துவமனைகளில் அட்மிஷன் மற்றும் டிஸ்சார்ஜ் செய்ய ஆகும் நேரத்தைக் கண்காணித்து முறைப்படுத்தவும் ஆணையம் முன்னுரிமை அளித்துச் செயல்படும்.

வங்கி மற்றும் மூலதனச் சந்தைகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட சிறந்தநடைமுறைகளைக் காப்பீட்டுத் துறையும் உள்வாங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
சீன ஏஐ சந்தையில் தடம் பதிக்கும் இந்திய நிறுவனங்கள்
அடுத்த செய்தி
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் புகார்

தொடர்புடைய செய்திகள்